இந்தியா
Typography

“பாமர மக்களுக்காக நடிகர் ரஜினிகாந்த் என்றுமே பேசியதில்லை, அதிகாரத்துக்கு ஆதரவாகத்தான் அவர் எப்போதும் பேசி வந்திருக்கின்றார்” என்று இயக்குனர் அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், கவுதமன், அமீர், மற்றும் கருணாஸ், தமிமூன் அன்சாரி, தனியரசு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது இயக்குனர் அமீர் பேசும் போது கூறியதாவது, “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதல் நடத்திய போது ஏன் ரஜினி பேசவில்லை. பாமர மக்களுக்காக ரஜினி என்றுமே பேசியதில்லை, அதிகாரத்துக்கு ஆதரவாகத்தான் ரஜினி பேசுகிறார். போராட்டக்களத்திற்கு வந்தால்தான் காவலர்கள் யார் என்பது பற்றி ரஜினிகாந்திற்கு தெரியவரும். அதிகாரத்திற்கு ஆதரவாகவே ரஜினியின் ‘ட்விட்டர்’ பேசுகிறது” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்