இந்தியா
Typography

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்சநீதிமன்றத்தில் நேற்று சனிக்கிழமை தொடர்ந்துள்ளது. 

அதேநேரத்தில், மத்திய அரசு 3 மாத அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகம், புதுவை, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக புதிய திட்டத்தை வகுக்கும்படி கடந்த மாதம் 16ஆந்; தேதி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நூறு ஆண்டுகளாக நடந்து வந்த நீர் பிரச்சனையானது தீர்க்கப்பட்டதாக கருதப்பட்டது.

மேலும் அதற்காக 6 வாரம் காலக்கெடுவும் நீதிமன்றம் மத்திய அரசுக்கு வழங்கியது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து அமைதியாக இருந்து வந்ததால் தமிழக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நான்கு மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஒரு சிறப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

அதன் பிறகும் காவிரி குறித்த எந்த ஒரு வெளியீட்டையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய காலக்கெடு கடந்த 29ஆந்; தேதியோடு முடிவடைந்து விட்டது.ந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசு அதனை செயல்படுத்தாத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக முடிவு செய்தது. இதன் அடிப்படையாக தமிழக அரசு அதிகாரிகள் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டு சட்ட நிபுணர்களோடு தீவிர ஆலோசனை நடத்தி அதற்கான வரைவு மனுவை தயார் செய்தனர். இதில் குறிப்பாக காவிரி வழக்கில் ஆஜராகி உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்த சேகர் நாப்தே, காவிரி வழக்கை முழுமையாக அறிந்த மூத்த வழக்கறிஞர் உமாபதி மற்றும் காவிரி தொழில்நுட்ப தலைமை பொறியாளர் சுப்ரமணியன், தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் ஆகியோர் இந்த ஆலோசனை மற்றும் வரை தயார் செய்யும் குழுவில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என தெரிவித்த தமிழக அரசு நேற்று மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS