இந்தியா
Typography

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் ராஜினாமா செய்வோம், தற்கொலை செய்வோம் என்று அதிமுக எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் அவ்வபோது கூறி வந்தாலும் இதுவரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக, ராஜினாமா செய்ய போவதாக அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார். ஏப்ரல் 2020ஆம் ஆண்டு வரை பதவிகாலம் இருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்காக தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும், ஜெயலலிதா அளித்த இந்த பதவியை காவிரிக்காக ராஜினாமா செய்வதில் பெருமை அடைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

காவிரிக்காக தற்கொலை என்பது தீர்வல்ல என்றும், உயிரோடு இருந்தால் தான் போராட முடியும் என்றும் தெரிவித்த எம்பி முத்துக்கருப்பன்,
நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். முத்துக்கருப்பனை தொடர்ந்து அனைத்து அதிமுக எம்பிக்களும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அரசியல்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS