இந்தியா
Typography

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றன.

அ. தி மு. க எம்பிக்கள் பாராளுமன்றத்தில் இன்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்ஹை முடக்கி வருகின்றனர். தொடர்ந்து போராட்டமும் நடத்தி வருகின்றனர். தமிழக அரசும் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியது

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறி இருப்பதாவது :- “காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்.“ என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS