இந்தியா
Typography

டி.டி.வி.தினகரன் தரப்புக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்தது. 

ஆர்.கே.நகர் தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார். இதனால் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அதே சின்னத்தை தனக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது சுப்ரீம் உத்தரவிட்டு உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்