இந்தியா
Typography

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தனி விமானம் மூலமம்,  மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

75 வயதுடைய அமிதாப்பச்சன், இப்போதும்  படங்களில்  நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும், தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் (Thugs of Hindostan) திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஒரு வாரமாக ஜோத்பூரில் நடந்து வருகிறது. இப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும்  அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து தனி விமானத்தில், ஜோத்பூரில் இருந்து அவரை மும்பை அழைத்துவரப்படுவது தெரியவருகிறது.  ஜோத்பூரில் தற்போது நிலவும்,  கடும் வெயில் காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்