இந்தியா
Typography

தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழகத்திரை நாயகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், காட்டும் அரசியல் தீவிரம் குறித்து நாளும், சமூக வலைத்தளங்களில் விமர்சித்துத் தள்ளுகிறார்கள் வலைஞர்கள்.

திருச்சியில் விபத்தில் பலியான கர்ப்பிணிப் பெண் உமாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் உதவியளித்துள்ளார் கமல்ஹாசன். இத் தொகை தமிழக முதல்வரால் அக் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட தொகையிலும் அதிகமானது எனப் பூரித்துப் போகிறார்கள் கமல் ரசிகர்கள். மாணவர்கள், தொழிலாளர்கள், என தேடிச் சென்று மக்களை வசப்படுத்தும் வகையில், சுறுசுறுப்பாகச் செயற்படுகின்றார் கமல் என்பது பொது அபிப்பிராயமாக  உருவாகத் தொடங்கியுள்ளதாகவும் கருதுகின்றார்கள்.

இதே வேளை ரஜினிகாந் இமயமலை யாத்திரை மேற்கொண்டிருக்கின்றார். ரிஷிகேஷ், பத்ரிநாத், ஆலய தரிசனம் மேற் கொண்டதான படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. இது குறித்து ரஜினி ரசிகர் மனம் மகிழ்ந்தாலும், மக்கள் மனங்களில் இடம்பிடிக்கும் வகையில் கமல் தரப்பு முன்னேறுவது குறித்து, மனத்தயக்கம் கொள்வதாகவும், வலைச்சமூகம் எழுதுகின்றது. ஆனால், தலைவர் வருவார், அனைத்தும் வெல்வார்,என நம்பிக்கை இரசிகன்  ஆர்வமாய் காத்திருக்கின்றான்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்