இந்தியா
Typography

உழைக்கும் மக்களின் ஒற்றுமை மாபெரும் சக்தி என்பதை, மகாராஷ்டிரா விவசாயிகளின் மும்பை பேரணி நிரூபித்துள்ளது. செங்கடலெனத் திரண்ட உழைக்கும் மக்களின் ஒற்றுமைப் போராட்டக் கோரிக்கைகள் குறித்து மகாராஷ்டிராவின் ஆளும் பா.ஜ.க அரசு கவனம் கொள்ள உறுதியளித்துள்ளது.

1. அனைத்து விவசாய கடன்கள் மற்றும் மின்சார கட்டணங்களை எந்த வித நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.

2. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

3. எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அமசங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

4. இயற்கை அழிவு மற்றும் பூச்சிகளினால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு நஷ்ட ஈடாக நிதியுதவி அளிக்க வேண்டும்.

5. பழங்குடியின மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை திருப்பியளிக்க வேண்டும் மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்கள் கட்டாயப்படுத்தி பறிமுதல் செய்யபப்டுதல் தடுக்கப்பட வேண்டும்.

எனும் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன், மார்ச் மாதம் 6ந் திகதி நாசிக்கில் தொடங்கிய போராட்டப் பேரணி, ஆறு நாட்கள் தொடர்ச்சியாக , 180 கிலோ மீற்றர்கள் நடந்து பயணித்து நேற்று மும்பையை அடைந்தது.

20 ஆயிரம் பேர்களுடன் ஆரம்பித்த இப் பேரணி மும்பையை அடைந்த போது, பல்லாயிரம் பேர்களைக் கொண்டதான பிரமாண்டப் பேரணியாக மாற்றம் பெற்றிருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவான ( All India Kisan Sabha)அனைத்திந்திய இந்திய விவசாயிகள் சங்கத்தினால் வழிநடத்தப்பட்ட இந்தப் பேரணிக்கு காங்கிரஸ், சிவ சேனா, மகராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா, முதலான கட்சிகள், ஆதரவு தெரிவித்திருந்தன. செங்டலின் அலைகளென மும்பைக்குள் நுழைந்த போராட்டகாரர்களுக்கு, மும்பை மக்கள் ஆதரவு வழங்கினர்.

பொது மக்களுக்கோ, பொதுப்பணிகளுக்கோ இடையூறு அற்ற வகையில் மிக நேர்த்தியாக வும், அமைதியாகவும் பங்கு கொண்டு, தலைமைச்செயலகத்தில் முதல்வரிடம் தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை , ஆய்வு செய்வதற்கும், அமுல்படுத்துவதற்கும் மகாராஷ்டிராவின் ஆளும் பாஜக அரசு இணக்கம் தெரிவித்துள்ள வகையில், விவசாயிகளின் இப் போராட்டம் வெற்றி கண்டுள்ளது.

இப் போராட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் பலத்த ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாண்மையானோர், 60 வயதுக்கும் மேலான விவசாயிகள், மற;றும் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்