இந்தியா
Typography

இந்திய முன்னால் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

இவரது இந்தப் பேச்சு மனிதநேயத்தை பிரதிபலிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தற்போது ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

அவர் இன்று ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூரில் முன்னால் ஐஐஎம் மாணவர்களுடன் கலந்துரையாடிய போதே தனது தந்தையான ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை மட்டுமல்லாது தனது பாட்டியான இந்திரா காந்தி கொல்லப் பட்டதற்கும் அரசியலில் ஒரு குறிப்பிட்ட நிலைப் பாட்டை இவர்கள் எடுத்தது தான் காரணம் என்றும் தாங்கள் கொல்லப் படலாம் என இவர்கள் முதலே அறிந்திருந்தனர் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது குறித்து கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்த போது ராகுல் காந்தியின் பேச்சு மனிதநேயமானது என்றும் ஆனால் இவ்விவகாரத்தில் 7 பேரின் விடுதலை தொடர்பில் எமக்குத் தேவை சட்டத்தின் தளர்வு என்ரும் தெரிவித்துள்ளார். இதேவேளை ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கடிதம் வரைய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாளவன் ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்