இந்தியா
Typography

கர்நாடகாவில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் 6 மாதங்கள் கழித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த உளவுத்துறை பிரிவு ஐ.ஜி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
 
மேலும், கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கா தெரிவித்திரிந்தார். ஆனாலும், போலீசார்க்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 18ம் தேதி கர்நாடக போலீசார்  சட்டத்துக்கு விரோதமாக ஆயுதம் கடத்தியதாக நவீன் குமார் என்ற நபரை கைது செய்து விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில் அவனுக்கு கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்பு உள்ளது போலீசார்க்கு தெரியவந்துள்ளது. இதனால் நவீன்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், நீதிபதிகள் அவனை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மூலம் - வெப்துனியா தமிழ் செய்திகள்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்