இந்தியா
Typography

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில உள்ள காந்தி சிலை முன் மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் 5ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழக்கமிட்டும்,  கைகளில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுகவின் மாநிலங்களை, மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கடந்த 5 நாட்களாக மக்களவை நடவடிக்கை தொடங்குவதற்கு  முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழக்கம் இடுவதால் அவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு வருவதம் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்