இந்தியா
Typography

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் செய்யும் முறையும், அவரது எண்ணமும் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

டில்லியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டின் அரசியல் சூழ்நிலை மற்றும் பட்ஜெட் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேசும் போது, “ராகுல் அரசியல் செய்யும் முறையும் அவரது எண்ணமும் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது. ராகுல் போல் அரசியல் செய்ய முடியாது. மக்களின் கவனத்தை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது. ரபேல் ஒப்பந்தம் குறித்து ராகுல் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்