இந்தியா
Typography

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அவருடன் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இப்போது சிந்திக்க முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

வார இதழில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில் நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது,

“ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும் இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும்.” என்றுள்ளார்.

Most Read