இந்தியா
Typography

‘ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் கட்சி எங்களுக்கு பாடம் நடத்தக்கூடாது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று புதன்கிழமை மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது, நாட்டை பிளவுபடுத்தியது காங்கிரஸ் கட்சியே என்று கூறினார். பாஜக நாட்டில் புதிதாக மாநிலங்களை உருவாக்கியது என்று கூறினார். காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை காட்டுகிறது என்று கூறினார்.

மேலும் ஜனநாயம் குறித்து தங்களுக்கு காங்கிரஸ் படம் நடத்த கூடாது என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ் கட்சியும், நேருவும் ஜனநாயகத்தை கொண்டு வர வில்லை என்று கூறினார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு இப்போது அனுபவிக்கிறது என்று பேசினார். நேரு ஆட்சியில் 12 கமிட்டிகளுக்கு தலைமை வகித்தவர் சர்தார் வல்லபாய் படேல் என்று கூறினார். திறமை வாய்ந்தவராக இருந்த போதிலும் அவரை நாட்டின் பிரதமராக ஆக்கவில்லை என்று பேசினார்.

மேலும், சர்தார் வல்லபாய் படேலை பிரதமாக்கி இருந்தால் காஷ்மீர் ரத்தம் சிந்தி இருக்காது என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க அனுமதிக்காக கட்சி காங்கிரஸ் என்று அவர் குற்றம் சாட்டினார். பரம்பரை ஆட்சியாளர்களால் நாட்டில் ஜனநாயகத்தை கொண்டு வர முடியாது என்று கூறினார்.

Most Read