இந்தியா
Typography

பா.ஜ.க. பாராளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதனையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா, வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர். அண்மைக்காலமாக பா.ஜ.க.வையும் மோடி அரசையும் அவர் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் அளித்துள்ள பேட்டியில், “பா.ஜ.க. வெற்றிக்காக எனது இரத்தம், வியர்வையை சிந்தி கட்சிக்காக உழைத்தவன் நான். 2014 பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராக பதவியேற்ற மோடி தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசை நான் விமர்சித்தாலும் கட்சியைவிட்டு நான் விலகமாட்டேன். அவர்களாக என்னை நீக்கினால் அதை செய்யட்டும். நான் நீக்கப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்கமாட்டேன்.” என்றுள்ளார்.

Most Read