இந்தியா
Typography

தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லை என்பதால், உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யபட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது, “தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது. உள்ளாட்சி தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் நடத்துவதால் தங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே தினகரன் அணியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என்றுள்ளது.

Most Read