சாதாரண குடிமக்களே இந்தியாவைச் செதுக்குகின்றனர் என்று குடியரசுத் தலைவராக பதவியேற்று ராம் நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். 

காஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களை நடிகர் கமல் ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். 

சீனாவின் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிரிவுபசார விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ‘‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்துள்ளனர். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.

More Articles ...

Most Read