பெலிக்ஸிற்கு கம்பெனி தர விண்ணுக்குச் சென்ற Kit Kat சாக்லெட்! - வீடியோ
- Tuesday, 16 October 2012 13:26

பெலிக்ஸ்சின் உலக சாதனையால் ரெட் புல் நிறுவனம் மட்டும் பயனடையவில்லை.
இதோ பெலிக்ஸுக்கு கம்பெனி கொடுக்கிறோம் என கிழம்பியுள்ளது KitKat சாக்லேட் நிறுவனம். பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான கிட்கட் தனது Kit kat சாக்லேட் பார் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. விண்ணுக்குச் சென்ற பெலிக்ஸ் தனது ஓய்வை அங்கு கிட்கேட்டுடன் சந்தோசமாக எடுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்ததாக கூறுகின்றது.
Uk Cambridgeshire இருந்து weather balloon இல் இணைத்து அனுப்பப்பட்ட இந்த சாக்லேட் பார் 116,490 feet வரை சென்றதாக தெரியவருகின்றது.
எனினும் பெலிக்ஸ் பயணித்த நேரத்திலேயே கிட்கேட் அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றபோதும் அவை பற்றிய தகவல்கள் முழுமையாக உறுதிப்படுத்தமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mashable

.jpg)