கங்னம் ஸ்டைல் பாடலுக்கு மியன்மார் சிறைக்கைதிகளின் சூப்பர் நடனம்
- Thursday, 04 October 2012 04:50
புகழ்பெற்ற கங்க்னாம் ஸ்டைல் பாடலை, மியன்மார் சிறைச்சாலை கைதிகள் பாடி நடனமாடிய வீடியோ சமூவகலைத்தளங்களி சென்சேஷனல் ஆகியுள்ளது.
பிலிப்பைன்ஸின் செபு மாகாணாத்தில் உள்ள புனர்வாழ்வு மற்றும் தடுப்பு முகாம் கைதிகள் சுமார் 1000 பேர் இணைந்து இப்பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
புகழ்பெற்ற தென்கொரிய ரேப் இசைக்கலைஞர் Psy யின் உருவாக்கத்தில் வெளியாகிய Gangnam Style யூடியூப்பில் அதிக லைக்ஸ் செய்யப்பட்ட வீடியோ பாடலாக கின்னஸ் சாதனை படைத்திருந்தது. இந்த பாடலின் இசை மற்றும் குதிரை நடன அசைவுகள் உலக் பிரபலம் பெற்றன. பலர் மிமிக்ரி செய்யவும் தொடங்கியிருந்தனர். அந்த வரிசையில் மியன்மாரின் சிறைச்சாலை கைதிகள் மேற்கொண்ட இந்நடனம் அச்சிறைச்சாலை பக்கம் சுற்றுலா பயணிகளை கவரத்தொடங்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மைக்கெல் ஜேக்சனின் திரில்லர் பெர்ஃபோமன்ஸை இதே சிறைச்சாலை கைதிகள் தமது நடனத்தின் ஊடாக கொண்டுவந்து புகழ்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்னாம் பாடலில் வருவது போன்று லிப்ஃட், சௌனா மற்றும் நீச்சல் குளத்தில் நடனம் மேற்கொள்ள சிறைக்கைதிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும் அவர்களது ஒருமித்த நடன அசைவுகளும், அவர்களது உற்சாகமான உணர்ச்சிகளும், இவ்வீடியோவை பார்ப்பவர்களுக்கு சிறைக்கைதிகளால் இப்படி இருக்க முடியுமா எனும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.

.jpg)