விளையாட்டு
Typography

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஜாகீர் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, இந்தியா வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் போது அணியின் ஆலோசகராக ராகுல் ட்ராவிட் செயற்படுவார் என்றும் இந்தியக் கிரிக்கெட் சபையின் தலைவர் சி.கே.கன்னா தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரது பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்ட அணில் கும்ளேவுக்கும், அணித் தலைவர் விராட் கோலிக்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றியதை அடுத்து, அணில் கும்ளே பதவி விலகியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

Most Read