விளையாட்டு
Typography

கிரிக்கெட் சாதனைகளுக்காக சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கும் ‘Hall of Fame’ விருது இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில், சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் சபை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், முத்தையா முரளிதரன் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளையும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள முரளிதரன், 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருடன் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

Most Read