விளையாட்டு
Typography

பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுக்கு தரப்படும் தினப் படியை பெருமளவு குறைக்க,
சி.ஒ.ஏ., முடிவு செய்துள்ளது.

சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,)
நிர்வாகம், சுப்ரீம் கோர்ட் நியமித்த கிரிக்கெட் கட்டுப்பாட்டுக்
குழுவிடம் (சி.ஒ.ஏ.,) உள்ளது. இக்குழு சார்பில் செலவுகளை குறைப்பது
உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தற்போது வீரர்களுக்கு தினப்படி ரூ. 8000 தரப்படுகிறது.
மாநில சங்க நிர்வாகிகள், அன்னிய மண்ணில் நடக்கும் தொடர்களுக்கு செல்லும்
போது கூட, ரூ. 32,000 ம் பெறுகின்றனர். ஆனால், பி.சி.சி.ஐ.,யில் கவுரவ
பதவியில் இருப்பவர்கள், பயணச் செலவு, ஓட்டல் செலவு என்ற பெயரில் தினப்படி
நாள் ஒன்றுக்கு ரூ. 48,000 பெறுகின்றனர். இதில் பெருமளவு குறைக்க
சி.ஒ.ஏ., முடிவு செய்துள்ளது.

Most Read