விளையாட்டு
Typography

பிசிசிஐ-யின் கவனக்குறைவால் இந்திய அணிக்காக விளையாட இருந்த 7 கிரிக்கெட் வீரர்களின் கனவு வீணானது என்று தகவல் வெளியாகி உள்ளது..

கொழும்புவில் வரும் 13 ஆம் திகதி முதல் யூத் ஆசிய கோப்பை தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 1-9-1998க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருந்தது. ஆனால், இதை சரியாக கவனிக்காத பிசிசிஐ இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான வயதை 1997 என தவறுதலாக அறிவித்தது. இதனால்,தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த தவறை கடைசி நேரத்தில் கவனித்த பிசிசிஐ அதிகாரிகள் அதிரடியாக 1997ல் பிறந்த 7 வீரர்களை நீக்கம் செய்துவிட்டது. இதனால், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் இருந்த சந்தீப் தோமர் (உத்திர பிரதேசம்), திக்விஜய் ராங்கி (இமாச்சல பிரதேசம்), டாரில் பெரரியோ (கேரளா), ரிஷப் பகத் (பஞ்சாப்), சிமர்ஜித் சிங் (டில்லி), இசான் சயித் (மகாராஷ்டிரா), சந்தன் சாஹினி (ஹைதராபாத்) ஆகியோரின் கனவு கனவாகவே ஆகிவிட்டது.

 

Most Read