விளையாட்டு
Typography

திங்கட்கிழமை டவுண்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்க தேச அணிகள் மோதிய போட்டியில் வங்க தேச அணி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற வங்க தேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டு இழப்புக்கு 321 ரன்களைக் குவித்தது.

பதிலுக்கு விளையாடிய வங்க தேச அணி மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 3 விக்கெட்டு இழப்புக்கு 41.3 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் வங்க தேச அணி சார்பாக ஷகிப் அல் ஹசன் 124 ரன்களையும், லிட்டொன் தாஸ் 94 ரன்களையும் குவித்தனர். இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் வங்க தேச அணி இதுவரை நடந்து முடிந்த 5 போட்டிகளில் 2 இல் வெற்றியடைந்தும், 2 இல் தோல்வியடைந்தும் இலங்கையுடனான ஒரு போட்டி மழை காரணமாக ரத்தாகியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்ற போட்டியில் ஆப்கான் 150 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. இதன் மூலம் இம்முறை ICC உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆப்கான் தான் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை நடந்த 5 போட்டிகளிலும் 4 இல் வெற்றி பெற்ற இங்கிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நாளை வியாழக்கிழமை அவுஸ்திரேலியா மற்றும் வங்க தேச அணிகளும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளும் தமக்கிடையே பலப் பரீட்சை நடத்துகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்