சமூக ஊடகம்
Typography

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் தாவோஸ் 2020 உலகப் பொருளாதார மன்றத்தின் 50 ஆவது கூட்டத் தொடரில், 'புவி வெப்பமயமாதல்' தொடர்பில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதன் தமிழாக்கம் வருமாறு:

'பருவநிலை மாற்றம் மிக ஆபத்தானது என பொதுமக்களிடையே நான் பேசுவது தொடர்பில் எச்சரிக்கப் பட்டேன். ஆனால் கவலை வேண்டாம். இது சாதாரணமானது தான். என்னை நம்புங்கள்! நான் ஏற்கனவே இது தொடர்பில் பல முறை பேசியுள்ளேன். இது தொடர்பில் பேசுவது எந்தவொரு பாதகமான விளைவுக்கும் இட்டுச் செல்லாது என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியமையானது ஓர் அட்டூழியமாகவும் அனைவரையும் கவலை கொள்ள வைத்ததாகவுமே இருந்தது. ஆனால் பாரிஸ் ஒப்பந்தத்தில் நாம் அனைவரும் உடன்பட்டுக் கொண்ட விடயங்களில் தோல்வி அடைந்தமை என்பது குறைந்தளவு அதிகாரம் கொண்ட அரசாங்கங்களைக் கூட கவலை கொள்ள வைக்கவில்லை. மேலும் எந்தவொரு அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரக் கட்டமைப்போ காலநிலை சீர்கேட்டைத் தடுக்க முடியவில்லை என்பதுடன் சுற்றுச் சூழல் மாற்றத்தின் அவசரத் தேவையை நிறைவேற்றி ஒரு ஒத்திசைவான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்கும் விதத்தில் இல்லை. இது வலது அல்லது இடது என்பது பற்றியதில்லை.

சிலருக்கு ஆப்பிரிக்கா போன்ற தேசங்களில் மரங்கள் வளர்க்க பணம் அளிப்பதன் மூலம் உங்கள் கார்பன் வெளியேற்றத்தை சமன் செய்யுங்கள் என நாம் சொல்ல வரவில்லை. அதே நேரம் உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளான அமேசன் போன்றவற்றை மிக மிக அதிக மடங்கு அழிக்க வேண்டாம் என்று தான் கூறுகின்றோம்.

நீங்கள் கூறுகின்றீர்கள், சிறுவர்கள் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இப்பிரச்சினையை நாம் பார்த்துக் கொள்வோம். இதை நாம் சரி செய்வோம்.
உங்களை வீழ்ச்சியடைய நாம் விட மாட்டோம் என உறுதியளிக்கின்றோம். நம்பிக்கை இழந்தவர்களாகாதீர்கள்! என. அதன் பின் என்ன? வெறும் மௌனம். அல்லது அதை விட மிகவும் மோசமான நடவடிக்கை. வெற்றுச் சொற்கள் அல்லது வாக்களிப்புக்கள்.

இவை தான் எனக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதான உணர்வுகளை அதிகப் படுத்தியுள்ளது. இந்த சபையில் நான் சொல்ல விளைவது யாதெனில், உங்களுடைய தலைமுறை போல் அல்லாது எனது தலைமுறை இந்த விடயத்துக்காக போராடித் தான் தீர்ப்போம்.'

இந்த உரைக்கு டிரம்ப் அளித்த பதில் உரையில் முட்டாள்களின் வாரிசுகள் தான் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்றுள்ளார். இக்கருத்துக்கு உலகம் முழுதும் இருந்து பல சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்