பூமிக்கடியில் வசதியான வீடுகள் : புகைப்படம்
- Monday, 22 October 2012 06:10

சுவிஸ்சர்லாந்தில் பிரபல கட்டிட நிபுணர் Peter Vetsch என்பவர் எண்ணத்தில் உருவான வீடுகள்தான் இந்த பூமியின் வீடுகள்.
சூரிச்சில் இருக்கும் Vetsch Architektur எனும் கட்டுமான நிறுவனம் Vetsch இன் தலைமையில் தனது சொந்த நிலத்தில் இவ்வாறன நிலத்தடி வீடுகளை கட்டி வருகிறது. அதுவும் இவ் வீடுகள் சுற்றுப்புறம் பசுமை சார்ந்தாக இயற்கையுடன் ஒட்டி வாழும் வாழ்க்கை முறையை தரும் என்கிறார்கள்.


இந்த பூமி வீடுகள் சுவிஸ்சர்லாந்தின் Dietikon எனும் இடத்தில் கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட வீடுகளாகவே கட்டப்படுகிறது. அதாவது மேலிருந்து பார்ப்பதற்கு சாதாரண குடிசை வீடுகள் போல் தோன்றும். ஆனால் உண்மையில் உள்ளே விசாலமாகவும் வசதியாகவே இருக்கிறதாம். இதில் 9 தனித்தனி வீடுகள் உட்பட உள்ளே 3 முதல் 7 வரையிலான படுக்கறைகளை கொண்டுள்ளன. வீடுகளின் நடுவே செயற்கையான ஏரி அமைக்கப்பட்டிருப்பதுடன் வாகன நிறுத்துமிடங்களும் உள்ளன.


இந்த வீடுகளின் மேல் பூமியின் பச்சை புல் படர்ந்து பாதுக்காக்கப்படுவதாகவும் கோடை மற்றும் மாரி காலங்களுக்கு ஏற்ப இவை வெப்பநிலையினை சமப்படுத்துவதாக அமையும் என தெரிவிக்கின்றனர்.


இயற்கை ஒருங்கிணைப்புடன் அமைத்த வீடுகள் மூலம் பெருமையடைவதாக கூறும் Vetsch கட்டும் பெரும்பாலன வீடுகள் நிலத்தடி வீடுகளாகவே உள்ளன.

இவற்றையும் காண்க:
- 007 துப்பறிவதற்கு உங்களுக்கு இருப்பது 70 செக்கன்கள் : வீடியோ
- அரசியல் தலைவர்களின் அழகான புதல்விகள் இவர்கள் : படங்கள்
- மனிதகுலத்தின் மற்றுமொரு மாபெரும் பாய்ச்சல் : பெலிக்ஸ்சின் உலக சாதனை :புகைப்படங்கள்
- போட்டோஷாப் இல்லாமல் கறுப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்திற்கு மாறமுடியுமா? : ஆம் என்கிறார் இந்த கலைஞர்
- தனது தாயாருடன் விஜய் தோன்றும் விளம்பரம் - வீடியோ
- நான்கு சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

.jpg)