இலங்கை
Typography

“மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த மியன்மார் ரோஹிங்யா அகதி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளி ஒருவரைக் காப்பாற்றுவதற்காகவே கல்சிசையில் கடந்த வாரம் ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.” என்று இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவரால், நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகதிகள் துன்புறுத்தப்பட்டமை, இனவாத நடவடிக்கை என்பதை விட, மியான்மார் யுவதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமையை மறைக்க, சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மேற்கொண்ட விடயம் என கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர், அடையாள அணி வகுப்பில் சாட்சியாளரால் அடையாளம் காட்டப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரை பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதான சாட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர் ஒருவருமாவர்.

இந்தச் சம்பவத்தின் பின்னர், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர், குறித்த அகதிகளை பிறிதொரு இடத்துக்கு மாற்ற, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததோடு, ஓகஸ்ட் 8ஆம் திகதி நீதிமன்றத்தின் அனுமதியும் இதற்காகக் கிட்டியது. இதற்கமைய, குற்றம்சாட்டப்பட்டவர்களால் முடிந்தளவு விரைவில் இந்த அகதிகளை இலங்கையை விட்டு வெளியேற்ற முயற்சிக்கப்படுகின்றது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்