வினோதம்
Typography

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ளது நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா உள்ளது.

இங்குள்ள மேகா, விஜயா, சினேகா ஆகிய புலிகள் சமீபத்தில் ஏழு குட்டிகளை
ஈன்றன. இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள்
பார்வையாளர்களிடம் கேட்டிருந்தனர். இதற்காக வனவிலங்கு பூங்காவி்ல் ஒரு
பெட்டி வைத்து அதில் பூங்காவிற்கு வருபவர்கள் தாங்கள் விரும்பிய பெயர்களை
எழுதி போடலாம் அறிவித்திருந்தனர்.

அதன்படி பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் நிறைய பேர் பாகுபலி என்ற
பெயரையே எழுதி போட்டிருந்தது தெரியவந்தது. பார்வையாளர்களின் விருப்பப்படி
ஒரு புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயர்சூட்டினர்.பாகுபலி-2 படம் இந்தியா
முழுவதும் பரபரப்பாக ஓடி வருகிறது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூலிலும்
சாதனை படைத்து வருகிறது.அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிக்கரமாக
ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புலிக்குட்டிக்கு இந்த பெயரை வைத்திருப்பதை அம்மாநில மக்கள்
பெருமையாக கருதுகிறார்கள.மற்ற புலிக்குட்டிகளுக்கு குந்தன், அடியஷா,
சாஹில், விக்கி, சினு, மவுசுமி ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டன. இதற்கான
விழாவில் ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்
பிஜய்ஸ்ரீரவுத்ரி கலந்து கொண்டார்

Most Read