வினோதம்
Typography

ஹைதராபாத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு புதிய பஸ் ஸ்டாப்
அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், ’தூய்மை இந்தியா’ திட்டத்துடன் ’மறுசுழற்சி இந்தியா’ என்ற
திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, பயன்படுத்தப்பட்ட
பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் உபயோகத்துக்கு வரும்.
இந்தியா முழுவதும் அதிகமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுத்தும்
நிலையில் அதை மறுசுழற்சி செய்ய அரசு இதுவரை எந்த நடவடிக்கைகளும்
மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் ஹைதரபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பஸ்
ஸ்டாப்பை அமைத்துள்ளது. 1000 ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு
8×4 அடி அளவுக்கு இந்தப் பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. பாட்டில்களுக்கு
இடையே ஓட்டை போடப்பட்டுள்ளதால் இதன் கீழ் நிற்பவர்களுக்கு புழுக்கம்
ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும், இதனை சேதப்படுத்தாமல்
உபயோகித்தால் பல ஆண்டுகளுக்கு இந்த பஸ் ஸ்டாப் நிலைத்து நிற்கும் என்றும்
கூறப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்