வினோதம்
Typography

இதுவரை கண்டறியப் படாத புதிய வகை பறக்கும் டைனோசர் இனத்தின் சுவடு சீனாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த இனத்தைச் சேர்ந்த டைனோசர் பறவை கிட்டத்தட்ட 3 டன் எடையும் 8 மீட்டர் நீளமும் கொண்டது எனவும்  அறிவிக்கப் பட்டுள்ளது. ஹெனான் மாகாணத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பெயிபெயிலோங் சினென்சிஸ் என்று பெயரிடப் பட்ட இந்த இனத்தின் முட்டை சுவடுகள் 45 cm விட்டமும் 5 Kg எடையும் கொண்டவை ஆகும்.

முட்டையில் இருந்து வெளிவரத் தயாரக இருந்த நிலையில் மரணித்த இந்த டைனோ பறவையின் சுவட்டை அதாவது அதன்  எலும்புகளை ஏனைய டைனோசர் இனங்களின் எலும்புகளுடன் ஒப்பிடப் பட்டே அதன் தாய் அதாவது வளர்ந்த டைனோ பறவை 3 டன்கள் வரை எடை கொண்டதாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த டைனோ பறவை இறகுகளும் வாலும் கொண்டதாக இருந்த போதும் அதன் உடல் எடையுடன் இறக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இதனால் பறக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்புக் குறித்து உயிரியல் பத்திரிகை ஒன்றுக்கு விளக்கம் அளித்த கல்காரி பல்கலைக் கழகப் பேராசிரியர் டார்லா ஷெலெனிட்ஸ்கி முதலில் இவை Tyrannosaur என்ற இனத்தைச் சேர்ந்தது எனத் தவறாகக் கருதப் பட்டதாகவும் ஆனால் புதிய சுவட்டினை ஆராய்ந்த போது இவை இராட்சத Oviraptorosaur என்ற டைனோசர் வகையைச் சேர்ந்தது என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய வகை டைனோ பறவைக் குட்டியின் இனத்துக்கு சூட்டப் பட்ட பெயரின் அர்த்தம் சீன மொழியில் 'Baby dragon from China' என்பதாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்