வினோதம்
Typography

கருப்பு நிற பெண்களும் அழகுதான் என்று ஒரு புகைப்படம் வைரலாகி நிரூபணம்
செய்துள்ளது.

The Uncanny Truth Teller 2 என்ற பேஸ்புக் பக்கத்தில் மூன்று கருப்பு
நிற பெண்கள் குறைந்த அளவு மேக்கப்புடன் உள்ள புகைப்படம் ஒன்று
வெளியாகியுள்ளது. The Faces of India they won't show you என்ற
வாசகங்களுடன் வெளியாகியுள்ள இந்த மூன்று பெண்கள் இருக்கும் புகைப்படம்
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த புகைப்படத்தை மிகக்குறுகிய
நேரத்திற்குள் 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பகிர்ந்து வருகின்றனர்.

இதே போல் பருத்த உடல் கொண்ட பெண்களின் படங்களும் வைரலாகி வருகிறது.
கருப்பும், பருத்த உடலும் கூட கொள்ளை அழகுதான் என்பதை இந்த பேஸ்புக்
பக்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது

BLOG COMMENTS POWERED BY DISQUS