வினோதம்
Typography

கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் மற்றும் அமெரிக்க அரசின் அதிகாரப் பூர்வமான பிறப்புச் சான்றிதழ் பதிவுகளின் படி உலகில் மிக வயதான நபர் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த சுசன்னாஹ் முஷாட் ஜோன்ஸ் என்ற பெண்மணி தனது 116 ஆவது வயதில் காலமாகி விட்டதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.

இப்பெண்மணியே பிறப்பு சான்றிதழ் பதிவுகளின் படி 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பிறந்த கடைசி தனிநபரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

1899 ஜூலை 6 ஆம் திகதி ஓர் அடிமைப் பெண்ணாக பிறந்த இவர் வியாழக்கிழமை புரூக்ளின் நர்சிங் ஹோமில் உயிர் துறந்துள்ளார். இவர் ஏற்கனவே இந்த நர்சிங் ஹோமில் இறுதி 30 ஆண்டுகள் தங்கி உயிர் வாழ்ந்தவர் என்றும் தெரிவிக்கப் படுகின்றது. அலபாமாவில் பிறந்த ஜோன்ஸ் ஆங்கிலத்தில் ஆட்டோமாபைல் (automobile)என்ற சொல் அறிமுகமான போது பிறந்தவர் என்றும் 2 உலக மகா யுத்தங்கள் மற்றும் 20 அமெரிக்க அதிபர்களது அதிகாரக் காலம் ஆகியவற்றைக் கடந்து 3 நூற்றாண்டுகளை எட்டியவர் ஆவார் என்றும் கூறப்படுகின்றது. சிறுவயதில் இவர் உண்ட புத்தம் புது கனி வகைகள் மற்றும் மரக்கறிகளே அவரது ஆயுளை நீடிக்கச் செய்ததாகவும் இவர் ஆல்கஹொல் குடித்தல் மற்றும் புகை பிடித்தல் ஆகிய பழக்கங்கள் இல்லாதவர் என்றும் கூட உறவினர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுமார் 11 சகோதரர்களுடன் பிறந்த இவரது பாட்டியும் கூட 117 வருடங்கள் உயிர் வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. நடப்பு உலகில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அருகி விட்ட நிலையில் உலகில் அதிக வயதுடன் உயிர் வாழ்ந்து வரும் அடுத்த நபராக இத்தாலியில் பிறந்த 116 வயதாகும் எம்மா மொரனோ என்பவர் விளங்குகின்றார். இப்பெண்மணியும் 1899 ஆம் ஆண்டு நவம்பர் 28 இல் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்