புகைப்பழக்கம் முதியவர்களிடையே பல்வேறு நோய்களை அதிகரிக்கிறது என்று
ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மூன்று தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டன. தொற்று
நோயல்லாத நோய்களில் அதிகளவில் முதியவர்களுக்கு தொல்லைத் தருவது இந்தப்
புகைப்பழக்கம் என்று இந்த ஆய்வு சொல்கிறது.
அதோடு, எந்த வயதில் புகைப்பிடிக்கும் பழக்கம் ஆரம்பித்து, எந்த வயதில்
நிறுத்தி இருந்தாலும் கூட, வயதான பின்னர் நுரையீரலுக்கு முன்பிருந்த
புகையிலைப் பழக்கம் பெரும் தொல்லைகளைத் தருவதாக இருப்பதாகவும் இந்த ஆய்வு
தெரிவிக்கிறது.