வினோதம்
Typography

இன்று வரை உயிர்ப்புடன் இருக்கும் 3800 வருட பழமையான தோட்டம் ஒன்றை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். வப்பாட்டோ (wapato) எனப்படும் இந்திய உருளைக் கிழங்கு சுற்றி வர சுவர்களுக்கு மத்தியில் இந்தத் தோட்டத்தில் பயிரிடப் பட்டுள்ளது.

இன்றைய நவீன அரிசிப் பயிர்ச்செய்கை நிலங்களுக்கு இணையாக இந்தத் தோட்டத்தில் நீர்ப்பாசனமும் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது. மனிதன் வேட்டையாடத் தொடங்கிய காலத்தில் விலங்குகளையும் மீன்களையும் இரவு உணவுக்காகப் பயன்படுத்தி வந்த நம் மூதாதையர்கள் பயிர்ச்செய்கையையும் விருப்பத்துடன் மேற்கொண்டதற்கு ஆதாரமாக இந்தத் தோட்டம் விளங்குகின்றது.

இதற்கு முன்னதாக கி.மு 5000 ஆம் ஆண்டளவில் ஜார்மோ என்ற மனித இனம் வடக்கு ஈராப் பகுதியில் கோதுமையைப் பயிரிட்டமைக்கு ஆதாரம் இருப்பதாகவும் ஆனால் இது மிகப் பழமையான பயிர்ச்செய்கையே அன்றி தோட்டச் செய்கை அல்ல என்று கூறப்படுகின்றது.

Most Read