வினோதம்
Typography

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் வானில் மிகுந்த வெளிச்சத்துடன் கூடிய தீப்பந்தம் போன்ற விண்கல் ஒன்று மணிக்கு 40 000 mph மீட்டர் வேகத்தில் வளிமண்டலத்தைக் கடந்து பூமியுடன் மோதியுள்ளது.

150 மக்கள் இந்த வெளிச்சம் மிகுந்த விண்கல்லைக் கண்டதாக அறிவிப்பு செய்துள்ள நிலையில் இது வளிமண்டலத்தைக் கடக்கும் பயணம் பலரது கமெராக்களிலும் பல கார் வண்டிகளின் cctv இலும் சிக்கியுள்ளது. அன்னா மரியா தீவுக்கு அண்மையிலுள்ள கடலில் வீழ்ந்ததாகக் கூறப்படும் இந்த விண்கல்லால் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.

சாதாரண விண்கற்களை விட இந்த விண்கல் அளவில் பெரியதாகவும் அதிக வெளிச்சம் உடையதாகவும் இருந்தது என அமெரிக்க விண்கல் ஆய்வு சமூகம் தெரிவித்துள்ளது

 

Most Read