வினோதம்
Typography

பூமியில் நம் கண்ணுக்குத் தெரியாது எம்மத்தியில் ஏலியன்கள் அதாவது வேற்றுக்கிரக வாசிகள் வாழ்ந்து வருகின்றனர் எனத் தான் நம்புவதாக பிரிட்டனின் முதல் மற்றும் முன்னால் பெண் விண்வெளி வீராங்கணை ஹெலன் ஷர்மான் இலண்டன் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் பூமியை விண்ணில் உயரத்தில் இருந்து பார்ப்பதை விட வேறு அழகு எதுவுமில்லை என்றும் தனது இந்த முதல் அனுபவத்தைத் தான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இவர் மேலும் கூறுகையில், 'விண்ணில் கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை சுற்றி வரும் கிரகங்களில் நிச்சயம் அனைத்து வித உயிர் வாழ்க்கையும் இருக்க முடியும். அவ்வாழ்க்கை பூமியைப் போன்று தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை.

வேற்றுக் கிரக வாசிகளிடம் இருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ள அதேவேளை அவர்கள் நம்மை விட மேம்பட்ட தொழிநுட்பத்துடன் இருந்தால் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்க முடியும். ஆனால் அவர்களைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை.' என்றுள்ளார்.

1991 இல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஹெலன் ஷர்மான் தன்னை ஒரு பிரிட்டன் எண் விண்வெளி வீராங்கணை என்று பாலினக் குறியீடுகளால் அழைப்பதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS