வினோதம்
Typography

பூமியில் மனிதன் சமுத்திரங்களைத் தாண்டாது, ஆறுகளைக் கடக்காது நடந்து செல்லக் கூடிய அதிகபட்ச தூரத்தை கூகுள் மேப் மூலம் கணிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது சுவாரசியமான பொறியியல் என்ற நிறுவனம்!

தென்னாப்பிரிக்க நகரின் கடலோரக் கிராமமான எல் அகுல்ஹாசில் இலிருந்து வடக்கு ரஷ்யாவின் மகடான் என்ற நகர் வரை அமைந்துள்ள 14 000 மைல்கள் தூரமே இந்த அதிகபட்ச நடைத் தூரமாகும். இத்தூரத்தை நாம் நடந்து மாத்திரம் பயணிக்க நமக்கு 3 வருடங்கள் தேவைப்படும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

இப்பயணத்தின் போது நாம் எந்த ஆறையும் கூடக் கடக்கத் தேவையில்லை. ஏனென்றால் முழு வழியும் பாலங்களால் ஆன சாலைகளால் ஆனதாகும். எனினும் இப்பயணத்தின் போது நாம் பருவநிலைகளுக்கு ஏற்றவாறு உயிர் வாழ பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் செல்வது அவசியம் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்