வினோதம்
Typography

அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில், தொன்னூறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி டன்சி "மிஸ் யூனிவர்ஸ் 2019" பட்டத்தினைத் தனதாக்கிக் கொண்டார்.

26 வயதான சோசிபினி டன்சி பாலின குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அதேபோல், என்னதான் அழகியாக இருந்தாலும் இயற்கை அழகை மட்டுமே நம்பும் பெண். இதுபோன்ற காரணங்களே அவரின் இந்த வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளன.

பாலின பேதத்தை உடைத்துக் கொண்டிருப்பவர், பாலினக் குற்றங்களுக்கு எதிரான போராளி, இயற்கை அழகினை பெண்கள் மத்தியில் வலியறுத்துபவர் எனும் பெருமைகளுக்குச் சொந்தக்கார். போட்டியின் போது " இன்றைய இளம் தலைமுறைப் பெண்களுக்கு என்ன கற்பிக்க வேண்டும்" எனக் கேட்கப்பட்ட போது, " பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது தலைமை பண்பு " எனக் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்