வினோதம்
Typography

உலகில் உள்ள 77 முக்கிய நகரங்களில் இந்தியாவின் பிரபல வர்த்தக நகரான மும்பையைச் சேர்ந்த குடிமக்கள் தான் மிகக் கடுமையாகவும், நீண்ட நேரத்துக்கும் பணியாற்றுகின்றார்கள் என UBS என்ற சுவிட்சர்லாந்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மும்பையில் ஒரு சராசரி தனி நபர் ஒரு வருடத்துக்கு 3, 314.7 மணித்தியாலங்கள் பணி புரிகின்றனராம்.

இது உலகளாவிய சராசரியான 1987 மணித்தியாலங்களிலும் அதிகம் என்பதுடன் ரோம் (1581 h)மற்றும் பாரிஸ் (1662 h) போன்ற முக்கிய ஐரோப்பிய நகரங்களை விட இரு மடங்கு அதிகமும் ஆகும். ஆனாலும் முக்கிய பொருட்களைப் பெற வேறு சில பாரிய நகரங்களை விட மும்பை வாசிகள் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. உதாரணமாக 54 மணித்தியாலம் வேலை செய்தால் ஒரு நியூயோர்க் வாசி வாங்கக் கூடிய ஐ போன் X இனை ஒரு சராசரி மும்பை வாசி வாங்க வேண்டுமென்றால் 917 மணித்தியாலங்கள் வேலை பார்த்த சம்பளத்தை செலவு செய்ய வேண்டும்.

எனினும் நியூயோர்க்கை விட மும்பையில் வாழ்க்கைச் செலவு அதன் 46% வீதமே ஆகும். ஆனால் ஒரு மணித்தியாலத்தில் மிக அதிகளவு சம்பாதிப்பவர்கள் வசிக்கும் நகரங்களில் ஜெனீவா, சூரிச் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை முன்னிலையில் உள்ள நகரங்களாகும். இதில் கெய்ரோவுக்கு முன்பு 76 ஆவது இடத்தில் மும்பை உள்ளது. மேலும் உலகில் அதிகம் செலவு கூடிய நகரங்களில் சூரிச் முன்னணியில் உள்ளது. மேலும் ஹாங் கொங் நகரும் உலகின் மிகவும் வாழ்க்கைச் செலவு கூடிய நகரமாகவும் பொருட்களுக்கான செலவு கூடிய நகருமாக உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS