வினோதம்
Typography

தெற்கு பசுபிக்கின் நியூசிலாந்து கடற்கரைப் பகுதிக்கு அருகே மிக உயரமாக 80 அடி நீளத்துக்குக் கடல் அலை எழுந்தது செவ்வாய்க்கிழமை பதிவாகி உள்ளது. இந்த அலையின் உயரம் 8 மாடிக் கட்டடத்தின் உயரத்துக்கு சமனானது என்பதுடன் இதன் அளவு 23.8 மீட்டர்கள் ஆகும்.

2012 இல் தெற்கு தஸ்மானியாவில் எழுந்த 22.3 மீட்டர் உயரக் கடல் அலையின் சாதனையை இது உடைத்துள்ளது. தெற்கு பசுபிக்கில் உலகின் 22% பகுதி சமுத்திரத்தை உள்ளடக்கிய இப்பகுதியே உலகில் மிகவும் ஆர்ப்பரிக்கும் அதியுயர் அலைகள் எழும் பகுதி என மூத்த சமுத்திரவியலாளர் டாம் டுர்ரெண்ட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் காலநிலை அவதான நிலையம் மார்ச்சில் தெற்கு சமுத்திரப் பகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் அலை நீளத்தை அளவிடும் கருவியை நிறுவியிருந்தது. இக்கருவி ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கும் ஒரு முறை 20 நிமிடங்கள் இயங்கக் கூடியது. இக்கருவி இயங்காத சமயங்களில் இந்த சமுத்திரப் பகுதியில் 25 மீட்டருக்கும் அதிக உயரத்தில் கூட அலைகள் எழ வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.

சமுத்திரவியல் வரலாற்றில் 1958 இல் அலாஸ்காவின் லித்துயா கடற்பரப்பில் எழுந்த 30.5 மீட்டர் உயரமான அலை கருதப் படுகின்றது. சுனாமி காரணமாக எழுந்த இந்த அலை 1700 இற்கும் அதிகமான மரங்களை வேரோடு அடித்துச் சென்றிருந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்