வினோதம்
Typography

இவ்வருடம் 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஐ.நா சபையால் வெளியிடப் பட்டுள்ளது.

இதில் முதலிடத்தை ஃபின்லாந்து பிடித்துள்ளது. கடைசி இடத்தில் புருண்டி உள்ளது. எந்தளவு மக்கள் என்ன காரணங்களுக்காக மகிழ்ச்சியாக உள்ளனர் என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மகிழ்ச்சி அறிக்கை தயாரிக்கப் படுவது வழக்கமாகும்.

கடந்த ஆண்டு நோர்வே முதல் இடத்திலும் மத்திய ஆப்பிரிக்க குடியரது கடைசி இடத்திலும் இருந்தது. பெரும்பாலும் முதல் ஐந்து இடங்களை நோர்டிக் நாடுகளும் கடைசி ஐந்து இடங்களை துணை சஹாரா ஆப்பிரிக்க தேசங்களும் பிடிப்பது வழக்கமாகும். இவ்வருடம் ஐ.நா அறிக்கையில் பிற நாடுகளில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்குக் குடியேறியவர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளின் வரிசை பின்வருமாறு, ஃபின்லாந்து, நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை ஆகும். இப்பட்டியலில் இங்கிலாந்து 19 ஆவது இடத்திலும் அமெரிக்கா 18 ஆவது இடத்திலும் உள்ளன. புள்ளி விபரத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 156 நாடுகளிலும் இந்தியாவுக்கு 133 ஆவது இடம் தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்