Tuesday, Jun 18th

Last update06:41:13 PM

ஆரோக்கிய சமையல் : சோயா பால் பழக் கஞ்சி

ஆரோக்கிய சமையலில் இம் முறை சோயா பால் பழக் கஞ்சி எவ்வாறு செய்வதென பார்க்க உள்ளோம்.

தேவையான பொருட்கள்:

சோயா-50 கிராம்,
பால்- ஒரு டம்ளர், ஏ
லக்காய்-ஒன்று,
கற்கண்டு-100 கிராம்,
ஆப்பிள்,
வாழைப்பழம்,
திராட்சை,
விதை இல்லாத கருப்பு திராட்சை -100 கிராம்
 
செய்முறை: முதலில் சோயாவை 4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிக்சியில் நிறைய நீர் விட்டு, நன்கு அரைக்கவும். பால் பதம் வரவேண்டும். பின்னர் இதை குடிநீர் வடிகட்டும் பெரிய சல்லடை வடிகட்டியில் வடிகட்டவும். அடுப்பில் பாலை ஊற்றி நன்கு பொங்கி வந்ததும், இந்த சோயா பாலையும் ஊற்றி அடிப் பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

சோயா பாலும் சேர்ந்து நன்கு கொதித்து, பொங்கி வரும்போது, கற்கண்டைப் போடவும். கற்கண்டு கரைந்து பொங்கி வரும்போது, ஏலக்காய் பொடி தூவி இறக்கி விடவும். இந்த சோயா பாலை நன்கு ஆறவைத்து, உங்களுக்குப் பிடித்த பழங்களை துண்டு துண்டாக வெட்டி அதில் போட்டு அலங்கரித்து, பிரிட்ஜில் வைத்து விடவும்.

லேசாக ஜில் ஆனதுமே எடுத்துப் பருகினால், பழங்களை சாப்பிட்டால் அற்புத சுவையுடன் இருக்கும். சோயா வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல ஊட்ட சத்துக்கள் நிறைந்தது. பெண்கள் தங்கள் மெனோபாஸ் காலக் கட்டத்தில் சருமம் வறட்சி அடையாமல் இருக்க தினமும் பருகலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற இந்த சோயா பால் பழக் கஞ்சி, சருமத்தை மினுமினுக்க வைக்கும்.   
        

- 4தமிழ்மீடியாவுக்காக படமும் ரெசிபியும் : எழில்செல்வி

மேலும் சில ஆரோக்கிய சமையல் குறிப்புகளை இங்கே அழுத்திக்  காணலாம்

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus