கூகுளின் இரகசிய டேட்டா சென்டர் : டாப் 5 இரகசியங்கள் என்ன? - 2
- Monday, 22 October 2012 10:27
ஆரம்பித்து 14 வருடங்களில் உலகின் முதல் தர டிஜிட்டல் நிறுவனமாக வளர்ந்து இன்னனும் அதன் நிலையை தக்க வைத்திருக்க முடியுமென்றால் அதுதான் கூகுள்.
முதல் தர நிறுவனமென்றால், ஒரு நாளில் 20 பில்லியன் இணையப் பக்கங்களை இன்டெக்ஸ் செய்வதுடன் 3 பில்லியன் சர்ச் குவாரிகளுக்கு பதில் தர வேண்டும்.
இதைவிட 425 மில்லியன் ஜிமெயில் பாவனையாளர்களுக்கு தடையில்லாத மின்னஞ்சல் சேவையை வழங்க வேண்டும்.
மில்லியன் கணக்கான யூடியூப் வீடியோக்களை கையாளவேண்டும். தேடும் சொற்களை டைப் செய்து முடிக்க முதல் அதற்கான விடையைத் தரவேண்டும்.
இதைவிட இன்னும் பல வேலைகள். இவற்றிற்கெல்லாம் பின்னின்று பலம் சேர்ப்பவையே கூகுளின் டேட்டா சென்டர்கள்.

உலகின் மொத்த மின்பாவனையில் கூகுள் டேட்டா சென்டர்கள் மட்டுமே 1.5 வீதத்தை எடுத்துக்கொள்கின்றன.
என்னதான் டேட்டா சென்டரை பொதுமக்கள் பார்வையிடவென திறந்து விட்டாலும் அவை பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடவில்லை.
அவ்வாறு இருக்கும் டாப் 5 இரகசியங்கள் பற்றி மற்றைய பதிவில்.
டேட்டா சென்டருக்குள் சென்ற முதலாவது செய்தி நிறுவனம் CBS News ஆகும் அவை பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோ இணைப்பு
