உங்கள் ஆண்ட்ராய்ட் 6.0 ஸ்மார்ட் தொலைபேசிகளை கூகிளின் கண்காணிப்பிலிருந்து பாதுகாப்பதில் முக்கியமானது நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் போன்ற விபரங்களை உங்கள் ஸ்மார்ட் தொலைபேசி மூலம் கூகிள் அறிந்திட முயற்சிப்பதை நிறுத்துவதாகும்.

நமது பிரபஞ்சத்திலேயே நாம் அறிந்த கூறுகளில் அது துகளாக இருந்தாலும் சரி அல்லது அலையாக இருந்தாலும்  சரி மிக வேகமானது இந்த 2 வித இயல்பையும் ஒருங்கே கொண்ட ஒளியாகும். இந்த ஒளியின் வேகம் என்ன? பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது 1676 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதியாகும்.

நமது மனித இனம் எமது பூமியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக பிரபல பௌதிகவியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாவ்கிங் தெரிவித்துள்ளார். இந்த ஆபத்தான கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்லும் விடயங்களில் மக்கள் அனைவரும் இணைந்து மிகவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பிரபஞ்சவியலாளரான (Cosmologist) ஸ்டீபன் ஹாவ்கிங் அண்மையில் பிரபஞ்சத்தைப் பற்றிய  25 நிமிடம் நீடிக்கும் ஆன்லைன் குறும்படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் பூமியில் நாம் ரேடியோ தொலைக் காட்டிகளை அமைத்து பிரபஞ்சத்தில் இருந்து வரும் வேற்றுக் கிரக வாசிகளின் சமிக்ஞைகளைப் பெறும்போது அதற்குப் பதில் அளிப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவில் மேம்பட்ட கலாச்சாரத்தைக் கொண்ட வேற்றுக் கிரக உயிரிகள் பூமியை ஆக்கிரமித்துத் தமது காலனியாக்கும் அபாயமும் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹேக்கர்கள் 26 இந்திய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கித்தகவல்களை திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக சனத்தொகையில் 47% வீதமானவர்கள் (கிட்டத்தட்ட அரைப் பங்கு மக்கள்) இணைய வசதியைப் பெற்று விடுவார்கள் எனக் கணிப்பு வெளியாகி உள்ளது.

2016, செப்டம்பர் மாத தொடக்கத்தில்,  ஐபோன் 7  மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஐ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வைத்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

More Articles ...

Most Read