தொழில்நுட்பம்
Typography

டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்களை தயாரித்து, அதனை சோதனை
செய்யும் முயற்சியில் முன்னணி கார் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.

டெஸ்லா மோட்டார்ஸ், சீனாவின் பெய்டு, கூகுள், யூபர், மெர்சிடஸ்,
போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட கார் தயாரிப்பு மற்றும்
தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகம் முழுவதிலும், முக்கிய நகரங்களில் இந்த
டிரைவர் இல்லா கார்களை சோதித்து வருகின்றன.

வால்வோ நிறுவனம், வால்வா எக்ஸ்.சி.90 ஸ் என்ற டிரைவர் இல்லா காரை
தயாரித்து, செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகர
சாலைகளில் சோதனை செய்து வருகிறது. யூபர் நிறுவனம் கலிபோர்னியாவில் இந்த
சோதனையை நடத்தி வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS