தொழில்நுட்பம்
Typography

இன்றைய உலகில் இணையம் என்பது ஈடற்ற ஒரு மாபெரும் சக்தியாக இருக்கிறது. மனித வாழ்வின் நாளாந்த நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது. எல்லைகள், தேசங்கள், கடந்து எல்லோரையும் இணைக்கும் இணையம் பற்றி நமக்கு என்ன தெரியும். நாம் அதன் வீச்சுக்களை  முழுமையாக அறிந்து வைத்திருக்கின்றோமா..?

இணையத்தின்  சாதக பாதகங்கள், சட்ட வரைபுகள் எதையுமே முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், எண்ணியவாறெல்லாம் அதனைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இணையம் மகத்தான சக்தி என்பது போல் ஆபத்தானதும் கூட. அதன் விளைவுககளின் விபரீதம் தெரியாமல், விளக்கின் சுடரினைத் தொட்டு விட முனையும் சிறு பிள்ளை விளையாட்டாகக் கருதிச் செயற்படுகிறோம்.

இணைய நுட்பம் கற்றுத் தெளிந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?.  முறையாய் பயன்படுத்தாவிடின் அது ஒரு ஆபத்தான பெரும் சக்தி. முறைப்படுத்திப் பயன்படுத்திக்கோண்டாலோ  அற்புதமான ஒரு வளம். நம் வாழ்க்கைக்கு உகந்த வளமாய் இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ள, அதன் சாதனைகள், சோதனைகள் என அனைத்தும் அறிவோம்...வெல்வோம்!

 4தமிழ்மீடியாவில் தொடராக வந்து பலரது வாசிப்புக்கும், பாராட்டுக்குமான  தொடர்  'இணையம் வெல்வோம்'.

தன் பக்கங்களை உங்களுக்காய் பதிவு செய்யும்.  பல்வேறு சுவாரசியத் தகவல்களோடு இணையத் தொழில்நுட்பமும் சார்ந்து வரும் இத் தொடரினை, இலக்கியமும், இணையத் தொழில்நுட்பமும் அறிந்த  வல்லுனர் தமிழரசன் எழுதியுள்ளார்.

நிச்சயமாக இது ஒரு தொழில் நுட்பக் கட்டுரைப் பதிவு அல்ல. உண்மைத் தகவல்களும், உயர் நுட்பச் செய்திகளும், இணைந்து வரும் புது எழுத்து !

இணையப் பயன்பாடு அதிகரிதுள்ள தமிழ்ச் சூழலில், இணையம் குறித்த புரிதலின் அவசியம் கருதி, இத் தொடரினை மீண்டும் தொடராக இங்கு பதிவு செய்கின்றோம்.

- 4தமிழ்மீடியா குழுமம்

BLOG COMMENTS POWERED BY DISQUS