தொழில்நுட்பம்
Typography

அப்பிள் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்பத்தில் அனைத்து அம்சங்களைக் கொண்ட ஐ-மேக் ப்ரோ டெஸ்டாப் கணினி இந்திய சந்தையில் அறுமுகமாகி சில மாதங்கள் ஆகின்றது.  இந்திய சந்தையில் இதன் விலை 4,15,000 ரூபாய் ஆகும். அதிகளவு வீடியோ எடிட்டிங்க் மற்றும் துல்லியமான கிராபிக்ஸ் டிஸைனிங்க் செய்பவர்களை குறிவைத்து இந்த புதிய ஐமேக் ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நவீன டிஸ்ப்ளே, அதிவேக பிராசஸர் மற்றும் கிராஃபிக்ஸ் திறன் கொண்ட பிராசஸர், விர்ச்சுவல் ரியாலிட்டி தரவுகளை உருவாக்கும் வசதி, புதிய போர்ட்கள் போன்றவைதான் இந்த உயர் விலைக்கு காரணமாகும்.

இதைவிட

27-இன்ச் 5கே டிஸ்ப்ளே

5120X2880 பிக்செல்

1 பில்லியன் கலர் சப்போர்ட்

கேம்பட் 3.2 ஜிஎட்ச்

டர்போ பூச்ட் 4.2 ஜிஎட்ச்

ஸ்ட்ரோரெஜ் 32ஜிபி 2666 எம்ஜிஎட்ச்

அதிகூடியளவு 18 கோர் சிபியூ ஐ கொண்டிருத்தல் (இந்திய சநதையில் 8கோர் சிபியூ விற்கு விலை 4,15,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது)

போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஐமேக் ப்ரோ.

இதுவரை வெளிவந்த மேக் கணிணிகளில் அதிக விலை கொண்ட கணிணி இதுவாகும். மற்றும் இந்தியாவிலும் இவ்வளவு விலை உயர்ந்த ஆப்பிள் உற்பத்தி ஒன்று நேரடியாக சந்தைக்கு வருவதும் இது முதல் முறை என்றும் கூறலாம்.

கணினியைக் கொண்டு எதெல்லாம் சாத்தியப் படாது என்று இதுவரை நினைத்திருந்தோமோ, அந்த எண்ணங்களை எல்லாம் முறியடிக்கும் வகையில் இந்த ஐ-மேக் உருவாக்கப்பட்டுள்ளது.

பொறியியல் நிபுணத்துவம் கொண்டு, பல சிறந்த அம்சங்களை இந்த ஐ-மேக் ப்ரோ கணினியின் நாங்கள் உட்படுத்தியுள்ளோம் என்கிறது ஆப்பிள் நிறுவனம்.

இந்திய சந்தையில் அதிகாரபூர்வ விற்பனையாளர்களிடமிருந்து இதை வாங்கலாம் என அப்பிளின் இந்திய இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பயன்பாடு எப்படி உள்ளது என்பதை கீழுள்ள வீடியோவில் விபரிக்கின்றார் Marques Brownlee.

எவ்வாறாயினும் இதற்கு முந்தைய பதிப்பில் வெளிவந்த அப்பிள் நிறுவனத்தின் ஏனைய கணிணிகளின் விலை அண்மையில் குறைந்து வருகின்றது. உதாரணங்கள் சில இங்கே.

 

ஆப்பிளின் புதிய வரவான ஐமேக் ப்ரோவின் அனைத்து இணைப்புக்களும் இங்கே

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்