புகைப்படம்
Typography

Word Press நிறுவனத்தினால் 2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படமாக ஹங்கேரி-சேர்பியா எல்லையில் முட்கம்பி வேலிகளுக்கு இடையே ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு அகதிகளால் கைமாற்றப்படும் கைக்குழந்தையை படம்பிடித்த புகைப்படம் தெரிவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய புகைப்படக் காரர் Warren Richardson இனால் எடுக்கப்பட்ட இப்புகைப்படம், மிகச் சக்திவாய்ந்த காட்சியமைப்பையும் அதே நேரம் மிக நுட்பமாக தீட்டப்பட்ட புகைப்படமாகவும் காணப்படுவதாக நடுவர் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த வருடத்திற்கான போட்டிக்காக பங்குபெற்ற 82,951 புகைப்படங்களில் இந்த புகைப்படம் முதலாவது இடத்தை பிடித்துள்லது.

மக்கள் புகைப்படங்கள் பிரிவில் சிறந்த படத்திற்கான முதல் பரிசை செர்பியாவின் பிரெசேவோ அகதிகள் முகாமில் காத்திருக்கும் குழந்தையின் புகைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

Spot News பிரிவில் சிறந்த படத்திற்காக மூன்றாம் பரிசை, துருக்கியின் சனிலுர்ஃபா மாகாணத்தின் அக்காக்கல் எல்லையை கடக்கும் சிரிய அகதிகள் குழந்தையின் புகைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

இதே பிரிவில் மூன்றாம் இடத்தை, லெபனான் பெக்கா வலேயில் உள்ள சிரிய அகதிகள் முகாம் ஒன்றில் இருக்கும் ஒரு குடும்பத்தின் போட்ரேய்ட் புகைப்படம் வென்றுள்ளது.

 Word Press Photo இன் பல்வேறு பிரிவிகளில் 2015ம் ஆண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை பார்வையிட :

http://www.aljazeera.com/indepth/inpictures/2016/02/photos-2015-world-press-photo-refugee-160218143806944.html

4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்