புகைப்படம்
Typography

65வது பிரபஞ்ச அழகிப்போட்டி எதிர்வரும் ஜனவரி 30 திகதி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் தேசிய உடைகளை அண்மையில் வெளியிட்டிருந்தனர்.

இதில் வெளியிடப்பட்டிருந்த மலேசிய அழகிப் போட்டியாளரின் உடை குறித்து பல்வேறு விமர்சனங்களும் பராட்டுக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அந்த உடை மலேசிய நாட்டின் சின்னமாக திகழும் இரட்டைக்கோபுர வடிவத்தை தாங்கி நிற்பதுதான்.

ஜோலிக்கும் இரட்டைக்கோபுரத்தை போன்றே இருபக்க தோள்களிலும் லேசர் வெட்டுக்களால் ஆன உலோக பேனல்கள், மற்றும்
உண்மையான கோபுரங்களுக்கு இடையில் இருக்கும் பாலத்தை அடையாளப்படுத்தி படிகத்தால் இழைத்துள்ள முறைப்பான கழுத்து பட்டை என அந்த ஆடை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு 100,000 க்கும் அதிகமான "ஸ்வரோவ்ஸ்கி" படிகங்களை கொண்டு கையினால் தைக்கப்பட்டிருப்பதோடு, இது அந்த நாட்டின் பாரம்பரிய கூடை நெசவு கைவினையை குறிக்கும் வடிவியல் மூலங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறதாம்.


உடையின் பெரும்பாலான வடிவமைப்புக்கள் கட்டிடம் மற்றும் அதன் கவர்ச்சியினை அடையாளப்படுத்துவதாக இவ் ஆடையின் வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

"விதிமுறைகளை உடைத்து" வித்தியாசமான முறையில் சிந்தித்த ஆடை வடிவமைப்பாளர்களை பாராட்டி உத்தியோகபூர்வ மிஸ் யுனிவர்ஸ் மலேஷியா பேஸ்புக் பக்கத்தினூடாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் நாட்டின் தேசிய உடை எனும் போது அவை கலாச்சார உடையாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை நாட்டை பிரதிபலிக்கும் வண்ணம் இப்படி கூட இருக்கலாம் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டன.


அதோடு கடந்த 2015ம் ஆண்டிற்காக நடைபெற்ற போட்டியில் சிறந்த தேசிய ஆடையாக தாய்லாந்து நாட்டின் மூச்சக்ர வண்டி ஆடை வெற்றிபெற்றிருந்தது. அதனை நினைவுகூர்ந்தும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.


இருப்பினும் சிலர் "மலேசியா கலாச்சாரத்திலும் அழகிய தேசிய உடைகளிலும் மிகையானது, அதோடு இந்த உடை பார்ப்பதற்கு பிரபஞ்சத்தின் மிஸ் சூப்பர்ஹீரோ போல் உள்ளது" எனவும் விமர்சனம் எழுந்தன.

எனினும் இந்த இரட்டைக்கோபுர ஆடையையும் நம்பிக்கையையும் சுமந்தபடி செல்லவிருக்கும் 20 வயதான மலேசிய அழகி கிரன் ஜஸ்சல் கூறுகையில் "எனக்கு மிகப்பெருமையாக உள்ளது ஏனனில் நாட்டை சிறப்பாக பிரதிபலிக்கக்கூடிய சின்னம் இது" என்கிறார்.

மலேசியா அழகியின் உடை மட்டுமல்ல மேலும் சில தேசிய உடைகளும் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் சூடு பிடித்தன. தாய்லாந்து அழகியின் "தாய்லாந்து நகை" உடையும் மற்றும் ஆஸ்திரேலியா அழகியின் கிரேட் பாரியார் பவளப்பாறைகள் (ரீப் உயர்) எதிர்கொள்ளும் ஆபத்துக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலான உடையும் விமர்ச்சிக்கப்பட்டன.

புகைப்படங்கள் மற்றும் தகவல் : channel news asia/straits times

Most Read