புகைப்படம்
Typography

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்த கிரகமான செவ்வாயில் உயிரினங்களுக்கான வாய்ப்பு உள்ளதா என பல தசாப்தங்களாகவே நாசா உட்பட விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

செவ்வாய்க் கிரகத்தில் 8 வருடங்களுக்கு முன்பு தரையிறங்கிய கியூரியோசிட்டி ரோவர் விண் ஓடம் இது தொடர்பில் தீவிர ஆராய்ச்சி செய்து வந்தது. தற்போது இந்த ரோவர் ஓடம் அங்கு பூச்சியினங்கள் இருந்தமைக்கான சான்றைக் கண்டு பிடித்திருப்பதாக அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

செவ்வாயின் தரை மேற்பரப்பை ஆய்வு செய்து அது தொடர்பாக கியூரியோசிட்டி அண்மையில் அனுப்பியிருந்த புகைப் படங்களை ஆய்வு செய்த போது அங்கு வெகு காலத்துக்கு முன் பூச்சியினங்கள் இருந்ததற்கான தேனீக்களின் கட்டமைப்புக்கு இணையான படிவங்களும், ஊர்வனக்கள் இருந்ததற்கான புதைப் படிவங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இது குறித்து வில்லியம் ரோமோசர் என்ற உயிரியலாளர் கூறுகையில் கவனமாக ஆய்வு செய்யப் பட்ட செவ்வாயில் இருந்திருக்கக் கூடிய இந்தப் பூச்சியினங்கள் டெர்ரான் பூச்சி வகைகளுக்கு ஒப்பான அம்சங்களுடன், வெளிப்படையான பன்முகத் தன்மையையும் கொண்டிருந்தன என்றுள்ளார்.

இதேவேளை கியூரியோசிட்டியின் இப்புகைப் படங்கள் காட்சிப் பிழை உருவங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என சில அறிவியலாளர்கள் வாதிட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்